எதிர்பாராத நேரத்தில் விவாகரத்தை அறிவித்த 4 தமிழ் திரையுலக இசையமைப்பாளர்கள்! யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இப்போது பிரபலங்களின் விவாகரத்து தான் பெருகி வருகிறது. சினிமாவில் இருப்பவர்களுக்கு பெண் தர மாட்டோம் என்ற காலம் மலை ஏறிப்போய் இப்போ சினிமாவில் இருப்பவர்களுக்கு தான் பலர் தேடி சென்று பெண் கொடுக்க விரும்புகிறார்கள். அதே சமயம் அதிகளவில் விவாகரத்து சர்ச்சையில் சிக்குபவர்களும் திரையுலக பிரபலங்கள் தான். 5 வருடம், 10 வருடம் ஒன்றாக வாழ்ந்துவிட்டு ஏதேதோ காரணங்கள் சொல்லி விவாகரத்து செய்கிறார்கள். அதன் பிறகு மீண்டும் அடுத்த திருமணம் செய்கிறார்கள். அப்படி பல ஆண்டுகள் வாழ்ந்து விவாகரத்து செய்த 4 டாப் இசையமைப்பாளர்கள் பற்றிய தொகுப்பு தான் இது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது நீண்ட நாள் காதலியான சைந்தவியை 2013 ஆம் அண்டு திருமணம் செய்தார். சைந்தவி பின்னணி பாடகி. ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார். 11 ஆண்டுகளுக்கு பிறகு ஜிவி பிரகாஷ் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். கடந்த மே 13 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்போது வரையில் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவருமே 2ஆவதாக திருமணம் செய்யவில்லை. இந்த ஜோடிகளுக்கு ஒரு மகள் உள்ளார்.
சீரியல்கள் மூலமாக சினிமாவில் இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்தவர் டி இமான். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். கோவை பிரதர்ஸ், தமிழன், கிரி, அன்பே வா, ரெண்டு, நான் அவன் இல்லை 2, மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கர் என்று ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டில் இங்க நாங்க தா கிங்கு, டென்ஸ், பேட்ட ராப், 2கே லவ் ஸ்டோரி, மழை, பப்ளிக், வெள்ளி மயில், சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் என்று பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சினிமாவில் கஷ்டப்பட்டு இவ்வளவு பெரிய இடத்துக்கு முன்னேறிய இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு மோனிகாவை விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு மே மாதம் அமெலியா உபால்ட் என்பரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இளையராஜாவின் மகன் யுவர் ஷங்கர் ராஜா தான். முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் இவர், 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக 2007ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பின்னர் 2-ஆவதாக ஷில்பா என்ற பெண்ணை 2011 அம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அந்த வாழ்க்கையும், 2014 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அடுத்த வருடத்திலேயே ஜஃப்ரூன் நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் இருக்கிறாள். இவர் தான் இளையராஜாவின் செல்ல பேத்தி என கூறப்படுகிறது.
ஆஸ்கர் நாயகன் என்றாலே அது ஏஆர் ரகுமான் தான். இவரது இசையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அது போலத்தான் அவரோட பின்னணி குரலும். இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வந்த ரோஜா படத்தின் மூலமாக சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான் இன்று உலகமே கொண்டாடும் ஒருவராக சினிமாவில் உயர்ந்துள்ளார். இவர் பேசுவது குறைவாக இருந்தாலும் இவர் இசை மற்றும் பின்னணி பாடல்களை பேசுபவர்கள் எத்தனையோ கோடி. அப்படிப்பட்ட இசையமைப்பாளர் 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு மனைவியை பிரிந்துள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சாய்ரா பானுவை திருமணம் செய்த ஏ ஆர் ரகுமான் திருமணம் செய்தார். இப்போது அவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் நேற்று இரவு சாய்ரா பானு தனது கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இத்தனை ஆண்டு காலம் சர்ச்சையில்லாமல் வாழ்ந்த வந்த சாய்ரா பானு மற்றும் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து செய்ய என்ன காரணம் என்று பேச தொடங்கியிருக்கிறார்கள். அமீன் மற்றும் ரஹீமா தங்களது பங்கிற்கு எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டு விவாகரத்து பற்றி பேசி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -