Jailer 2 : ஜெயிலர் 2 பாகத்தினை எடுக்க ஆயத்தமான இயக்குநர் நெல்சன்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று வெளிவந்த படம் ஜெயிலர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், மோகன் லால், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
தற்போது வரை ஜெயிலர் படம் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலை அள்ளி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளதாக இயக்குநர் நெல்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதுபோல் நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கவும் திட்டம் உள்ளது.”
மேலும் பேசிய அவர், “ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் மிக பெரிய மாஸ் நடிகர்கள். அவர்கள் இருவரையும் சேர்த்து ஒரு படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. அது பெரிய பணி, இதற்கு நேரம் கூடி வந்தால் அதனையும் செய்வேன்” என்று கூறினார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -