Suriya Movie Lineup : அடுத்தடுத்த படங்களில் பிஸியான சூர்யா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் பிரபல நடிகர் சிவக்குமாரின் மகன் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் மணிரத்னம் தயாரிப்பில் உருவான நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து நந்தா படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.
நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், “நான் நினைத்து பார்த்ததை விட கங்குவா படம் 100 மடங்கு அற்புதமாக வந்துள்ளது.”
இரண்டாவதாக, வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு, இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விரைவில் தொடரும் என தெரிவித்தார்
மூன்றாவதாக, சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது பெற்ற சுதா கொங்கரா -சூர்யா கூட்டணி சூர்யா 43இல் மறுபடியும் இணைய உள்ளதாக கூறினார்.
பின்னர், “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் உள்ள ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையை என்னிடம் கூறினார். அது மிகவும் நன்றாக இருந்தது. லோக்கேஷின் கனவு படமான இரும்பு கை மாயாவி படத்திற்கு பிறகு இது படமாக்கப்படும்.” என்றார் சூர்யா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -