Neetu Chandra RJ Balaji : நீத்து சந்திரா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இருவருக்கும் இன்று பிறந்தநாள்!
ரேடியோ ஜாக்கி, கிரிக்கெட் வர்ணனையாளர், சமூக ஆர்வலர், இயக்குநர், நடிகர் என பன்முக திறைமையாளராக விளங்குகிறார் ஆர்.ஜே. பாலாஜி.
பிரபல ரேடியோ சேனலில் ரேடியோ ஜாக்கியாக இருந்து தனது தனித்துமான பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.
தீயா வேல செய்யணும் குமாரு, நானும் ரவுடி தான் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவானார்.
மூக்குத்தி முருகன் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.
2005 ஆம் ஆண்டு வெளியான கரம் மசாலா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நீத்து சந்திரா.
2006ம் ஆண்டு வெளியான 'கோதாவரி' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
விஷால் நடிப்பில் வெளியான 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமின்றி கிரேக்க மொழி படத்திலும் நடித்துள்ளார்.
சம்பாரன் டாக்கீஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நீத்து சந்திரா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள்.