Gana Bala Hits : கானா பாலாவின் குரலில் ஒலித்த சூப்பர் ஹிட் பாடல்கள்!

கானா பாலா
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி படத்தில் ஆடி போனா ஆவணி என்ற பாடலை கானா பாலா பாடி இருந்தார். இந்த பாடல் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
சேட்டை படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையில் எதத்தான் கண்டுட்ட நீ புதுசா என்ற பாடலை படி இருந்தார். இது காதல் தோல்வி பாடலாக இருந்தாலும் பாலா குரலில் நல்ல வைபாக இருக்கும்.
மணிமாறன் இயக்கத்தில் வெளிவந்த உதயம் NH4 என்ற படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் கானா பாலா ஒர கண்ணால என்ற பாடலை பாடி இருந்தார்.
2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் ராஜா ராணி. இந்த படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் ஏய் பேபி என்ற பாடலை கானா பாலா பாடி இருந்தார்.
கோகுல் இயக்கத்தில் வெளிவந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என் வீட்டிலே நான் இருந்தேனே என்று ஒரு தலை காதலை விவரிக்கும் பாடலை கானா பாலா பாடி இருந்தார்.
ரவி கே சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த யான் படத்தில் ஆத்தங்கரை ஓரத்தில் என்ற காதல் பாடலை கானா கலந்து பாடி இருந்தார் பாலா. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.