Nayan Vicky : முதலாம் ஆண்டு திருமணநாளை குழந்தைகளுடன் கொண்டாடும் விக்கி நயன்!
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். பின்னர் விஜய் சேதுபதி - நயன்தாராவின் நடிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார்.
நல்ல வரவேற்பை பெற்ற நானும் ரவுடிதான் படப்பிடிப்பிம் போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இதே நாளில் கடந்த வருடம் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் பல முன்னனி பிரபலங்கள் கலந்து கொண்டனர். வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தது விக்கி-நயன் ஜோடி.
தற்போது இவர்களின் திருமணநாளை குழந்தைகளுடன் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் விக்கி வழக்கம் போல் நயனின் க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.