Nayanthara Skincare : காஸ்மெட்டிக் பிசினஸில் கால் தடம் பதிக்கும் நடிகை நயன்தாரா!
சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘செல்ஃப் லவ் விரைவில் தொடங்கும்..’ என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் நயன்தாரா. நயன், புதிதாக பிசினஸ் தொடங்கவுள்ளார் என்ற தகவலும் அங்கங்கே பரவியது.
அந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்டிற்கு, “9ஸ்கின்” என பெயர் சூட்டியுள்ளார். இந்த நிறுவனத்தை, விக்னேஷ் சிவன் மற்றும் டெய்சி மார்கன் என்பவருடன் இணைந்து நடத்தவுள்ளார் நயன்.
இந்த ஸ்கின் கேர் பிராண்ட் பிசினஸ், வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று திறக்கப்படவுள்ளது.
ஷாருக்கானுடன் நயன் நடித்த படம், 600 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து வருகிறது
நயன் தனது இன்ஸ்டா கணக்கை ஆரம்பித்தவுடன், பல மில்லியன் ஃபாலோவர்ஸ் அவரை பின் தொடங்கினர்.
அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், குழந்தைகளுடன் எடுக்கும் புகைப்படத்தையும், சினிமா ப்ரோமோஷன் ரீதியான பதிவுகளை பகிர்வதுடன், தனது பிசினஸிற்கு தேவையான பிராண்டிங்க்கையும் செய்து வருகிறார். இதற்கு முன்பாக, ‘தி லிப் பாம் கம்பேனி’ என்ற ஸ்கின் கேர் பிராண்டை, டாக்டர் ரெனிடா ராஜனுடன் சேர்ந்து தொடங்கினார் என்பது குறிப்படத்தக்கது.