Nayanthara : ஐம் லாஸ்ட்..இன்ஸ்டா ஸ்டோரியில் அதிர்ச்சி பதிவியை ஷேர் செய்த நயன்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த வைத்த நயன்தாரா தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

திரைபயணம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் அதே வேளையில் தொழிலதிபராகவும் கலக்கி வருகிறார்.
நடிப்பை தாண்டி ரவுடி பிக்சர்ஸ் பேனரின் கீழ் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
மேலும் தி லிப் பாம் கம்பெனி, பேமி 9 மற்றும் 9 ஸ்கின் என சொந்தமாக பிராண்ட்களை உருவாக்கியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்ததாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஒரு சிலர் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு என சொல்ல ஒரு சிலரோ இது அனைத்தும் பிசினஸ் யுக்தி என விமர்சனம் செய்து வந்தார்கள்.
இந்நிலையில் புதிதாக 'தி டிவைன் ஃபூட்ஸ்' என்ற நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் நயன்தாரா.
அதை தொடர்ந்து தற்போது 'ஐம் லாஸ்ட்' என தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இது புதிய பிராண்ட் ஸ்டேடர்ஜியாக இருக்குமோ என யூகிக்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -