Nayanthara: தன்னுடைய காதல் அனுபவம் பற்றி நயன்தாரா சொன்னது என்ன தெரியுமா?
பெரும் சர்ச்சைகளுக்குப் பின் நடிகை நயன்தாராவைப் பற்றிய ஆவணப்படம் இன்று நவம்பர் 18 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாராவின் திரைத்துறை பயணம், கடந்த கால காதல் வாழ்க்கை, விக்னேஷ் சிவனுடன் காதல் , திருமணம் , குழந்தைகள் என தனது அனுபவங்களை பற்றி மனம் திறந்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிம்பு இயக்கிய வல்லவன் திரைப்படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. சிம்பு நயன் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். நயன்தாராவின் அனுமதி இல்லாமல் சிம்பு இந்த புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டதே இந்த பிரிவுக்கு காரணம் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “என்னுடைய முதல் காதல் முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. அதுமட்டும் தான் ஒரு காதல் உறவில் இருவருக்கும் இடையே நல்ல உறவை நிலையாக வைத்திருக்கும். காதலில் எப்போதுமே நம்பிக்கை ரொம்ப முக்கியம். நம் எதிரில் இருப்பவர் நம்மை முழுவதுமாக காதலிக்கிறார் என்று நம்ப வேண்டும். என்னுடைய முந்தைய காதல் பற்றி இதுவரை நான் பேசினது இல்லை. எல்லாரும் ஒன்றை அவர்களாகவே பேசத் தொடங்கிவிட்டார்கள். என்ன நடந்தது என்று எதுவுமே தெரியாமல் அவர்கள் என்ன நம்ப ஆசைப்படுகிறார்களோ அதையே அவர்கள் பேசினார்கள்.” என்றார்.
அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம். இதுவரை நான் காதலித்த நபர்களிடம் சென்று நீங்கள் ஏன் இதை செய்தீர்கள் என்ன நடந்தது என்று யாரும் கேட்டதில்லை. எப்போதுமே ஒரு பெண்ணை மட்டும்தான் இந்த. மாதிரி கேள்விகள் கேட்பார்கள். இது நியாயமே இல்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
நயன்தாரா வில்லி படம் ஷூட்டிங்கின் போது நடன இயக்குநர் பிரபு தேவா இருவரும் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இருவரும் பிரிந்தனர். இந்த ஆவணப்படத்தில் பெயர் குறிப்பிடாமல் “ என்னை நடிப்பதை விட்டு வெளியேற சொன்னார். “ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -