Kanguva: சூர்யாவின் கங்குவா பற்றி ஜோதிகா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் - என்ன தெரியுமா?
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. படம் பார்த்த பலரும் படத்தில் அதிக சத்தம் இருப்பதாக விமர்சித்தனர். படம் பற்றி பலரும் எதிர்மறையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பெற்று வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிலையில், கங்குவா படம் குறித்து சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் சூர்யாவின் மனைவியாக அல்லாமல் ஒரு ரசிகையாக குறிப்பிடுகிறேன். கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் கண்டிப்பாக அந்த சத்தம் காரணமாக ரசிகர்களிடம் சென்று சேரவில்லை. 3 மணி நேர படத்தில் அது வெறும் முதல் அரைமணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், கண்டிப்பாக கங்குவா ஒரு சிறந்த அனுபவம். இதுபோன்ற ஒரு ஒளிப்பதிவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது.
சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படத்தின் முதல் காட்சி முடியும் முன்னரே எதிர்மறை விமர்சனம் வந்தது. முதல்நாளிலே இவ்வளவு விமர்சனத்தை பரப்பியது வேதனை அளிக்கிறது. பல குழுக்களாக இணைந்து கங்குவா படததிற்கு எதிராக விமர்சனத்தை பரப்பி வருகின்றனர். என்று குறிப்பிட்டு தனது கருத்துகளை தெரிவித்திருந்தார்.
கங்குவாவின் நேர்மறையான விஷயங்கள் இல்லையா? பெண்களின் ஆக்ஷன் காட்சிகள். இளைஞரின் காதல், கங்குவாவிற்கு நிகழ்ந்த துரோகம்? விமர்சனத்தின்போது இதுபோன்ற நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்கவில்லை என்று கருதுகிறேன். கங்குவா படத்தின் கதைக்காகவும், அவர்களின் முயற்சிக்காகவும் 3டியில் அற்புதமான காட்சிகளை காட்டியதற்காகவும் அவர்கள் பாராட்டிற்கு தகுந்தவர்கள். கங்குவா அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்துள்ள இந்த படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் திரைப்படம் எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும் நன்றாகதான் இருக்கிறது சில தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -