குழந்தை பெத்துக்க தான் வலிக்குது... தூக்கிட்டு போகவுமா? - வைரல் வீடியோவால் நயனுக்கு வந்த சிக்கல்!
உலக அழகி ஐஸ்வர்யாராயே 10 மாதம் வயிற்றில் சுமந்து ஆரத்யாவை பெற்ற நிலையில் பணம், புகழுக்காக நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. நயன்தாரா விதிகளை மீறி குழந்தை பெற்றிருப்பதாகவும், இவர் இளம் தலைமுறைக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை காட்டும் தவறான முன்னூதாரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் நயன்தாரா கலாச்சார சீரழிவு என்றெல்லாம் விமர்சித்தனர்.
இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விதிமுறைகளை முறையாக பின்பற்றியே நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. இது அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
குழந்தைகள் பிறந்த பிறகு எங்கு சென்றாலும் கணவன் விக்னேஷ் சிவன், குழந்தைகளுடன் தான் நயன்தாரா பயணம் செய்கிறார். அப்படிபோகும் போதெல்லாம் குழந்தைகளுடன் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுத்து பதிவிட்டு வருகிறார். இதற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் கமெண்ட் மற்றும் லைக்குகள் குவிந்து வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு வீடியோ அந்த இமேஜை டேமேஜ் செய்துள்ளது.
விமான நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில் நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவன், 2 குழந்தைகள் மற்றும் உதவியாளர்களுடன் செல்கிறார். இரட்டை குழந்தைகளில் ஒன்றை விக்னேஷ் சிவனும், மற்றொன்றை உதவியாளர் பெண்மணியும் எடுத்து வருகின்றனர். யாரோ ஒருவர் இதனை படம் பிடிப்பதை பார்த்த விக்னேஷ் சிவன் நயனை வேகமாக கடந்து சென்று அலர்ட் செய்கிறார். உடனே நயன் கேமரா இருக்கும் திசையை பார்த்தப்படியே உதவியாளரிடம் இருந்த குழந்தையை தான் வாங்கிக் கொள்கிறார்.
சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் குழந்தை பெத்துக்க தான் வலிக்குது... தூக்கிட்டு போகக்கூட வலிக்குதா? என விமர்சித்து வருகின்றனர். தனுஷ் மீது அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில் கோபமாக இருந்த அவரது ரசிகர்களும் கிடைச்சிதுடா நமக்கொரு சான்ஸ் என்பது போல் நயனை வசைபாடி வருகின்றனர்.