Aakash Baskaran: தனுஷின் ’இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளர் - ஆகாஷ் பாஸ்கரனின் திரைத்துறை பயணம்!
நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். நித்யா மேனன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் நேற்று (21.11.2024) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா , விக்னேஷ் சிவன் , தனுஷ் , சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
விக்னேஷ் சிவன் இயக்கிய தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் ஆகாஷ் , தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல், பாவக்கதைகள் ஆகிய படங்களிலும் விக்னேஷின் சிவனின் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
இந்த திருமண நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் மனைவி துர்கா, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இட்லி கடை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பேங்காக்கில் நடைபெற்று வருகிறது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.