Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
மலையாள திரையுலகில் இருந்து கோலிவுட் பக்கம் வந்த திறமையான நடிகை தான் நயன்தாரா. எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, சினிமாவில் கால் பதித்து இந்த அளவு இவர் உயர்ந்துள்ளதற்கு காரணம் நயன்தாராவின் கடின உழைப்பும், அவரின் திறமையும் தான்.
'ஐயா' படத்தில் துவங்கி, கடைசியா இவர் நடிப்பில் வெளியான 'டெஸ்ட் ' திரைப்படம் வரை... தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நயன்தாரா.
அதே போல் எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும், அதை உள்வாங்கிக்கொண்டு நடிக்கும் திறன் படைத்தவர். அந்த கதாபாத்திரத்திற்கு எப்படி மேக் ஓவர் செய்தால் நன்றாக இருக்கும் என இயக்குனரிடம் பேசி தன்னை தானே மெருகேற்றி கொள்பவர்.
தமிழ் சினிமாவில், கமல்ஹாசனை தவிர, ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ரவி மோகன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில், முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தது மட்டும் இன்றி இவர் நடித்த 'ஜவான்' திரைப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
மேலும் இவரது நடிப்பில், அடுத்தடுத்து 8 படங்கள் உருவாகி வருகிறது. எவ்வளவு பிசியாக நடித்து கொண்டிருந்தாலும்... கணவர் - குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா இன்று தன்னுடைய 3-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய காதல் மனைவி நயன்தாராவுக்கு வாழ்த்து கூறும் விதமாக விக்கி சில ரொமேன்டிக் புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமாக பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
அந்த பதிவில், இது ஒரு இனிய திருமண நாள் என் உயிரே நயன்தாரா! இந்த ஒளிக்கும், புன்னகைக்கும், நன்மைக்கும், ஏராளமான ஆசீர்வாதங்களுக்கும், முக்கியமாக என் மகிழ்ச்சிக்கும் காரணம் நீங்கள்தான்! கடவுளின் அக்கறை, பிரபஞ்சத்தின் ஆதரவு மற்றும் பல ஆண்டுகளாக நாம் சம்பாதித்த அனைத்து அன்புக்குரியவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் நல்லெண்ணம் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும்! மேலும் என் வலிமை மற்றும் என் அமைதிக்கு வாழ்த்துக்கள்! என்றும் அழியாத அன்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்களை உண்மையாகவும், வெறித்தனமாகவும், ஆழமாகவும், என் முழு மனதுடனும், ஆன்மாவுடனும் நேசிக்க வைக்கிறது என தெரிவித்துள்ளார்.