இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன், சூர்யாவை தொடர்ந்து 'பருத்திவீரன்' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. முதல் படத்திலேயே தேசிய விருது படத்தில் நடித்த கார்த்திக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.
ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை, சகுனி என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து, மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை தக்கவைத்து கொண்டார்.
இவர் நடிப்பில் கடைசியாக 'மெய்யழகன்' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக முதலுக்கு சேதாரம் இல்லாமல் கலெக்ஷன் செய்தது.
நடிப்பு தாண்டி கடந்த சில வருடங்களாக கார்த்தி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி மே 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடியது அனைவரும் அறிந்ததே. இதையொட்டி, நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் கடந்த ஒருவார காலமாக பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர்த்து நடிகர் கார்த்தியின் பிறந்த நாளில் இருந்து தற்போது வரை 515 பேர் தமிழ்நாடு முழுவதும் இரத்ததானம் செய்துள்ளனர்.
பிறந்த நாள் கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது என்றில்லாமல் பொது மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளில் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் ஈடுபட்டது பொது மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களின் இந்த செயலால் நடிகர் கார்த்தியும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.