Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
திரையுலகினர் மத்தியில், அதிகம் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் அஜித். தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என 15 வருடத்திற்கு முன்பே அஜித் தில்லாக முடிவெடுத்தாலும், இவர் நடித்த படங்கள் வெளியானால், அந்த படங்களை ஆட்டம், பாட்டம், என வரவேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆண்டிற்கு ஒரு படம் மட்டுமே அஜித் நடித்து வருகிறார். ஆனால், இந்த வருடம் அவரது நடிப்பில் ஒரு படமும் வெளிவரவில்லை. ஆனால் இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் இந்தப் படம், ஹாலிவுட் படமான 'பிரேக் டவுன்' படத்தின் ரீமேக் என்பதால் அதற்கான உரிமையை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் டைட்ஸ் வாங்காமல் எடுத்துள்ளதால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரூ.150 கோடி கேட்டு, விடாமுயற்சி படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தகவல் சமூக வலைத்தளத்தை சுற்றி வருகிறது.
இந்தப் படத்தின் ஒரு சில காட்சிகள் இன்னும் எஞ்சியிருப்பதால் இந்த மாதம் இறுதிக்குள்ளாக அதனை எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்போது கார் ரேஸுக்கான பயிற்சியில் அஜித் துபாயில் இருக்கிறார். வரும் ஜனவரி மாதம் கார் ரேஸ் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான வேலையில் அஜித் பிஸியாக இருக்கிறார்.
இதற்காக தனது ரேஸ் காரை ரெடி பண்ணுவது முதல் எப்படியெல்லாம் பயிற்சி எடுக்கலாம் என்று தன்னுடைய அணிக்கும் டிரைனிங் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அஜித் கார் மற்றும் பை ரேஸர் என்பது ஒட்டுமொத்த உலகம் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால், அவருடைய மனைவி ஷாலினி கூட ரேஸ் கார் ஓட்டியுள்ளார் என்கிற சுவாரஸ்ய தகவல் லீக் ஆகியுள்ளது.
இந்த தகவலை அஜித்தின் தோழி அலிஷா அப்துல்லா தான் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஷாலினி மேடம் ஒரு முறை அஜித் சாரின் ரேஸ் காரை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்டு சுற்றி வந்தாங்க. ரேஸ் கார் ஓட்டுறது என்பது எளிதான விஷயம் இல்லை. ஏனென்றால் ஸ்டீரியங்க் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அதோடு ஹெல்மெட் மற்றும் அதற்கான உடை அணிந்து தான் ஓட்ட முடியும். கீழே அமர்ந்து ஓட்ட வேண்டும். ஆனால் அவர் மிகவும் அசாதாரணமாக ஒரு ரவுண்ட் வந்தாக என கூறியுள்ளார். பின்னர் அஜித்தை பார்த்து எப்படித்தான் இதை ஓட்டுறீங்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா என கொஞ்சலுடன் கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்களும் அஜித் மனைவியாச்சே அப்போ கெத்தாக தான் இருப்பர் என கூறி வருகிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -