Naga Chaitanya Net Worth: அப்பாவுக்கு ரூ.3000 கோடி சொத்து இருந்தாலும் நாக சைதன்யா சம்பாதித்த சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சினிமா பின்னணியிலிருந்து வந்த வாரிசு நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் வெளியில் தெரியாமல் இருந்த நாக சைதன்யாவுக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது சமந்தாவுடன் முதல் முறையாக இணைந்து நடித்த 'ஏ மாயா சேசாவா'. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷன் தான் இந்த படம். இப்படம் இப்படி தமிழில் வெற்றி பெற்றதோ அதே போல் தெலுங்கிலும், நாக சைதன்யா - சமந்தா ஜோடிக்கு நல்ல ரீச் கொடுத்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதை தொடர்ந்து இவர் நடித்த மஜிலி, லவ் ஸ்டோரி, பிரேமம் என பல படங்கள் மாஸ் வெற்றியை பெற்றது. தெலுங்கு திரையுலக பிரபலமான இவரை பற்றி கோலிவுட் ரசிகர்களையும் அதிகம் பேச வைத்தது சமந்தா உடனான திருமணம் மற்றும் விவாகரத்து தகவல் தான்.
மேலும் இயக்குனர் வெட்கட் பிரபு, மாநாடு வெற்றிக்கு பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு இயக்கிய கஸ்டடி படத்தின் மூலம் தமிழிலும் நாக சைதன்யா அறிமுகமானார். மிக பெரிய ஹைப்புடன் இந்த படம் வெளியான போதிலும், படு தோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் சோபிதாவுடன் காதலில் பிஸியான சைதன்யா, தற்போது தண்டால் என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மீனவ மக்கள் நடுக்கடலில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த படம் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்பட பணிகளில் பிசியாக இருக்கும் நாக சைதன்யா இன்று, தன்னுடைய காதலி சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். நாக சைதன்யா பற்றிய தகவல்கள் அதிகம் வெளியாகி வரும் நிலையில் தற்போது இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சைதன்யா பிறப்பிலேயே கோல்டன் ஸ்பூன்... இவருடைய தந்தை சுமார் ரூ.3000 கோடிக்கு அதிபதி. அதே போல் சைதன்யாவின் தாய் லக்ஷிமியும் சுமார் 500 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார். ஆனால் எப்போதுமே நாக சைதன்யா தன்னுடைய பெற்றோரை சார்ந்து இருக்க விரும்பாமல் தன்னுடைய உழைப்பில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நினைப்பவர். அப்படி இவர் இதுவரை சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு பற்றி பார்ப்போம்.
நாக சைதன்யாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.154 கோடி என கூறப்படுகிறது. இவருக்கு மனைவியாக வரும் சோபிதா துலிபாலாவின் நிகர சொத்து மதிப்பான ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியா டுடேயின் அறிக்கையின் படி நாக சைதன்யாவின் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். கடந்த ஆண்டில் நாக சைதன்யா ஹைதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். சினிமா துறையில் இருக்கும் நாக சைதன்யா 2022ஆம் ஆண்டு ஷோயு எனப்படும் கிளவுட் கிச்சனை தொடங்கி சமையல் உலகில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டார். இதுதவிர மைத்ரா, ஏரியல், டஸ்வா, மேக்னம் இந்தியா, டஸோஸ் போன்ற பிராண்டுகளின் அம்பாஸிடராக இருக்கிறார். இதன் மூலமாகவும் வருடத்திற்கு 2 முதல் 3 கோடி வரை இவருக்கு வருமானம் வருகிறது.
கார் பிரியரான இவர், அடிக்கடி தன்னுடைய தந்தையுடன் இணைந்து கார்களை வாங்கி குவித்துள்ளார். நாக சைதன்யாவுக்கு கார் என்றால் பிடிக்கும் என்பதால்... நாகர்ஜுனா தன்னுடைய திருமண பரிசாக காரை தான் அவருக்கு கொடுத்துள்ளார். நாக சைதன்யாவிடம் ரெட் காரில் நிசான் ஜிடி ஆர், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் ஜி63, ஃபெராரி எஃப்430 போன்ற பல ஆடம்பர கார்கள் உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -