Tamil Music Directors : தமிழ் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து இசையிலும் தொடரும் வாரிசுகளின் பங்களிப்பு!
சினிமாவில் இசையமைப்பாளர்களின் பங்கு இன்றியமையாதது. ஒரு படத்திற்கு தனது இசை மூலம் ஸ்கோர் செய்பவர்களின் பங்கு இசையமைப்பாளருக்கு அதிகம் உண்டு. அந்த வகையில் தந்தையின் வழியே மகன்களும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாக கலக்கி வருகிறார்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘அன்னக்கிளி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா அவரை தொடர்ந்து அவரின் முத்த மகன் கார்த்திக்ராஜா ரஜினிகாந்த் நடித்த ‘பாண்டியன்’ படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அவரின் தந்தை அளவிற்கு அவரால் தமிழ் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.
இதைதொடர்ந்து இளையராஜவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ மூலம் அறிமுகமானார். இவரின் பாடல்களை இளைஞர்கள் வலிகளை மறக்க உதவும் ட்ரக்ஸ் என்றே சொல்கின்றனர்.
தேனிசை தென்றல் தேவா கானா பாடல்களுக்கு பெயர் போனவர். சூப்பர் ஸ்டார் என ரஜினிகாந்தின் டைட்டில் கார்டுக்கு பின்னணியில் ஒலிக்கும் இசைக்கு சொந்தக்காரர் தேவாதான். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா 'டபுள்ஸ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானர். 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஏ. ஆர். ரைஹானா 2004ம் ஆண்டு வெளியான 'மச்சி' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் பல படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார். அவரின் மகன் ஜி.வி. பிரகாஷ் இளம் வயதிலேயே அபாரமான இசை ஞானத்தை வளர்த்து கொண்டார்.
தற்போது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எந்திரன் படத்தில் 'புதிய மனிதா' பாடலை பாடியவர் கதீஜா ரஹ்மான். இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மின்மினி' படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -