✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

AR Rahman Net Worth: 57 வயதில் மனைவியை பிரியும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மணிகண்டன்   |  20 Nov 2024 09:33 AM (IST)
1

இயக்குனர் பாலச்சந்தர் தயாரிப்பில் - மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, 'ரோஜா' திரைப்படத்தின் மூலம், வெள்ளித்திரையில் தன்னுடைய இசை பயணத்தை துவங்கியவர் ஏ.ஆர்.ரகுமான். 'ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்' என்கிற பழமொழிக்கு ஏற்ப, தன்னுடைய முதல் படத்திலேயே... ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கு தேசிய விருது கிடைத்தது.

2

imag'ரோஜா' படத்திற்கு பின்னர் இவர் இசையில் வெளியான புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே என இவர் கை வைத்த படங்கள் எல்லாமே தொடர்ந்து ஹிட்டடிக்க துவங்கியது. ரோஜாவில் துவங்கிய இவருடைய இசை பயணம், 150-க்கும் மேற்பட்ட படங்களை தொடந்து சூர்யாவின் 45-ஆவது படம் வரை வந்துள்ளது. இதற்காக ஏ.ஆர்.ரகுமான் போட்ட உழைப்பு அளவிட முடியாதது. இரவு - பகல் பாராமல் இசை மீது இவர் காட்டிய ஆர்வம் தான், இவரை ஆஸ்கர் மேடையில் ஏற்றி அழகு பார்த்தது. அதாவது 2008-ம் ஆண்டு வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்கிற படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காக தான் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதை வென்றார்.e 2

3

1992-ஆம் ஆண்டு ரோஜா திரைப்படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான், சுமார் 30 ஆண்டுகளை கடந்து, 2கே கிட்ஸ் வரை ரசிக்கும் படியான இசையை வழங்கி வருகிறார். இதுவே இவரை தலை சிறந்த இசையமைப்பாளராக தனித்துவமாக காட்டுகிறது.

4

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய முதல் படமான 'ரோஜா' படத்தில் இசையமைக்க ரூ.25 ஆயிரம் மட்டுமே சம்பளமாக பெற்ற நிலையில், தற்போது இவர் இசையமைக்கும் படங்களுக்கு ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

5

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளை கடந்து இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கும் இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் தான்... இந்திய திரையுலகின் பணக்கார இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவருடைய சொத்து மதிப்பு, ரூ.1728 கோடி என கூறப்படுகிறது.

6

ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய குடும்பத்தினரால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட சாய்ரா பானு என்பவரை, 1995-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதீஜா, ரஹீமா என்கிற இரண்டு மகள்கள் மற்றும் அமீன் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.

7

ஏ.ஆர்.ரகுமானுக்கு திருமணம் ஆகி 29-ஆண்டுகள் ஆகும் நிலையில், நேற்று இரவு ஏ.ஆர்.ரகுமான் மனைவி சாய்ரா பானு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிவதாக லாயர் மூலம் அறிவித்தார். இந்த தகவல் தற்போது தென்னிந்திய திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • AR Rahman Net Worth: 57 வயதில் மனைவியை பிரியும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.