ரெடியா இருங்க..அடுத்த வாரங்களில் வெளியாகும் திரைப்படங்கள் லிஸ்ட்!

திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பதை விரும்புபவர்கள் இருப்பார்கள். மாதத்தில் ஒரு படமாவது சென்றுவிட என்றும் திட்டமிடுபவர்களும் இருக்கிறார். அப்படி இருப்பவர்களுக்கு நவம்பர் மாதத்தில் கங்குவா, அமரம் படங்களுக்கு அடுத்து இன்னும் சில படங்கள் வெளியாக இருக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
எழில் பெரியவேடி இயக்கியிருக்கும் பராரி படத்தில் ஹரிஷங்கர் , சங்கீதா கல்யாண் , குரு ராஜேந்திரன் , சாம்ராட் சுரேஷ் , புகழ் மகேந்திரன் , பிரேம்நாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையில் சாதிய பிரச்சனையை பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆர். ஜெ. பாலாஜி நடித்துள்ள படம் சொர்க்கவாசல். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் செல்வராகவன் , பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , நட்டி , சானியா ஐயப்பன் , அந்தோனி தாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கிறிஸ்டோ ஸேவியர் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ் பிரபா, சித்தார்த் விஸ்வநாத் , அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் நவம்பர் 29 (வெள்ளிக்கிழமை)ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா. அபிராமி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சார்லீ சாப்ளின் , கோவை பிரதர்ஸ் , மகா நடிகன் , இனிது இனிது காதல் இனிது , இங்லீஷ்காரண் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் இதன் இயக்குனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 22 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
சித்தார்த்தின் சோலோ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மிஸ் யூ. மாப்ள சிங்கம்’ மற்றும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படங்களின் இயக்குநர் N.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகி. ஜே.பி, பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 29 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -