Merry Christmas Review : விஜய் சேதுபதி - கத்ரீனா காம்போ எப்படி இருக்கு? மேரி கிறிஸ்துமஸ் படத்தின் குட்டி விமர்சனம் இங்கே!

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “மேரி கிறிஸ்துமஸ்” படத்தில் விஜய் சேதுபதியும், கத்ரீனா கைஃப்பும் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முக ராஜன், காயத்ரி, ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ஒரு கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதைதான் “மேரி கிறிஸ்துமஸ்”. ஆல்பர்டாக விஜய் சேதுபதி, மரியாவாக கத்ரீனா நடத்துள்ளனர். இரண்டு மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை மிகவும் குறைவான கேரக்டர்களே தாங்கி பிடித்துள்ளார்கள்.

மேலும் தமிழ் வெர்ஷனில் போலீஸ் அதிகாரிகளாக பயன்படுத்தப்பட்டுள்ள ராதிகா சரத்குமார், சண்முக ராஜன் இருவரும் வந்த பின்னரே, படம் விசாலமாகிறது. அதேபோல் கத்ரீனாவின் வாய் அசைவிற்கு ஏற்ற தமிழ் டப்பிங் கச்சிதமாக உள்ளது
இந்த படத்தில் யார் அந்த கொலையை செய்தார்கள் என யூகிக்க முடியாதவாறு காட்சிகள் அனைவர் மீதும் சந்தேகம் எழும்படி அமைக்கப்பட்டுள்ளது. இப்படியாக, மேரி கிறிஸ்துமஸ் மற்ற படங்களில் இருந்து தனித்து நிற்கிறது. இதற்காகவே இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுக்கு பாராட்டுகள்.
அதேசமயம் மெதுவாக நகரும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள், குற்றம் நடந்த நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகள் இருக்கிறதா என்று ஆராயாமல் பழைய விசாரணையை கையிலெடுக்கும் போலீசார் என பல ஓட்டைகள் உள்ளன.
ஒட்டுமொத்த படத்திலும் இறுதியாக வரும் அந்த 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சி தான் சிறப்பு .அதற்கேற்றாற்போல் கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரீதமின் பின்னணி இசை மாஸ்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -