Raththam Short Review : மீண்டும் ஒரு க்ரைம் கதை.. ரத்தம் படத்தின் குட்டி விமர்சனம் இதோ!
சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் ரத்தம் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரபல பத்திரிகையாளர் செழியனின் கொலை சம்பவத்தில் ஏற்படும் புதிரில் இருந்து தொடங்கும் கதை மெல்ல கதாநாயகன் ரஞ்சித் குமாரை (விஜய் ஆண்டனி) நோக்கி நகர்கிறது.
ஒரு காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளராக இருந்த ரஞ்சித் தற்போது தனது மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். தனது மனைவி இறந்துவிட்ட குற்றவுணர்ச்சியால் தீவிர மதுபோதைக்கு அடிமையாகிறார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் மீண்டும் தனது வேலைக்குத் திரும்பும் ரஞ்சித் மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகளை செய்பவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
நல்ல ஒரு கதையை கொண்டிருந்தாலும் அதை சராசரிக்கும் குறைவான சுவாரஸ்யத்தில் எடுத்திருக்கிறார் சி.எஸ் அமுதன். இந்த கொலைகளை எல்லாம் செய்பவர்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லாமலே சாமர்த்தியமாக கடந்துசென்று விடுகிறார். ஒன்றன் பின் ஒன்றாக சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் வந்தபடி இருக்கின்றன.
ஆக மொத்தத்தில் வன்முறை தெரிப்பதை குறிக்கும் வகையில் “ரத்தம்” என டைட்டில் வைத்தாலும் உள்ளே அதற்கான எந்த தடயமும் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை..!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -