Custody Movie review : மங்காத்த அளவிற்கு மாஸ் காட்டியதா கஸ்டடி? வெங்கட் பிரபு செய்த சம்பவம் என்ன? கஸ்டடியின் குட்டி விமர்சனம்!
90களில் ஆந்திராவில் நடக்கும் கதை. ராஜமுந்திரியில் நடக்கும் வெடி விபத்து வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் மிகப்பெரிய ரௌடியாக இருக்கும் அரவிந்த்சாமி சி.பி.ஐ. அதிகாரியாக வரும் சம்பத்திடம் பிடிபடுகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறையில் இருக்கும் அரவிந்த்சாமியை காப்பாற்ற அதிகார வர்க்கத்தினர் முயற்சிக்கின்றனர். இவர்களை எதிர்த்து கான்ஸ்டபிள் நாகசைதன்யா கடமை தவறாத காவல் அதிகாரியாக செயல்படுகிறார்.
வழியில் காப்பாற்ற முயற்சி செய்தவர்களாலேயே அரவிந்த்சாமியை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் பின்னணி என்ன? பெங்களூரு செல்லும் 4 பேரின் கதி என்ன? என்பதை நாகசைதன்யாவின் ஆக்ஷன் அவதாரத்துடன் கஸ்டடி படம் விளக்குகிறது.
முதல் அரை மணி நேரம், தெலுங்கு டப்பில் போல் இருக்கும் இப்படம், போலீசிடம் அரவிந்த்சாமி சிக்குவதில் இருந்து விறுவிறு பின்னணி இசையுடன் ஆடியன்ஸை கட்டிப் போடுகிறது படம்.
அரவிந்த் சாமியை கொள்வதற்கான காரணமும் வலுவாக இல்லை. மேலும் பாடல்கள் படத்துக்கு தடையாக இருந்தாலும் பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் வழக்கமான வெங்கட் பிரபுவின் ஜாலி கமர்ஷியல் மேக்கிங்கிற்காக ’கஸ்டடி’ படத்தை தியேட்டரில் பார்க்கலாம்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -