Thiruvin Kural Review : அருள்நிதி சூப்பர் ஆனால் படத்தின் கதை சுமார்..என்ன பண்ணி வச்சிருக்கீங்க ஹரீஷ் பிரபு?
அன்பான அப்பா, அழகான முறைப்பெண், குடும்பம் என அனைத்தும் வாய்ந்த வாய் பேச முடியாத - காது கேட்காத, மிகவும் கோபக்கார இளைஞரான அருள்நிதி, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிய தன் அப்பா பாரதிராஜாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதிக்கிறார். ஆனால் அங்கு கொலை கும்பல் ஒன்றுடன் எதிர்பாராமல் பகைத்து சிக்கிக் கொள்ள, அவர்களிடமிருந்து தன் மொத்த குடும்பத்தையும் காப்பாற்ற அருள்நிதி எடுக்கும் மிக நீ...ண்ட போராட்டமே ‘திருவின் குரல்’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபேச முடியாத, சரிவர காது கேளாத அதேசமயம் கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில் அருள்நிதி எப்போதும்போல் அநாயசமாக பொருந்திப் போகிறார். சுற்றி நடப்பவற்றை துல்லியமாக கவனிப்பது, அப்பாவுக்காக குடும்பத்துக்காக நாடி, நரம்பு துடிக்க போராடுவது, சண்டை என உடல்மொழி, பாவனைகளால் ஸ்கோர் செய்கிறார்.
விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு துடிதுடிக்கும் அப்பா கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா பரிதாபத்தை வரவழைக்கிறார். படம் முழுக்க வந்தாலும் அவருக்கு ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை.
அதேபோல் கதையின் அடிநாதமாக இருக்கும் அப்பா - மகன் சென்டிமெண்ட் எதிர்பார்த்த அளவு படத்தில் கடத்தப்படவில்லை. கதைக்குள் சீக்கிரமாகப் பயணித்து விறுவிறுவென்று சென்று விட்டாலும், அதன்பின் பரிதாபத்தை மட்டுமே வரவழைக்கும் நோக்கில் மருத்துவமனைக்குள்ளேயே சுழன்றடிக்கும் திரைக்கதை அயற்சியைத் தருகிறது.
சாம். சி.எஸ் வழக்கம்போல் பாடல்களில் ஏமாற்றுகிறார். ஆங்காங்கே பின்னணி இசை கதைக்கு வலுசேர்க்கிறது மற்றும் போரடிக்கவும் வைக்கிறது.
சண்டைக் காட்சிகள் படத்துக்கு வலு சேர்க்கின்றன. அருள்நிதி, பாரதிராஜா, வில்லனாகத் தோன்றும் அஷ்ரஃப் என நல்ல நடிகர்கள் இருந்தும் தவறான கதைக்களத்தால் தான் நினைத்ததை படத்தில் கொண்டு வர முடியாமல் திணறி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ஹரீஷ் பிரபு... அடுத்த படத்துக்கு வாழ்த்துகள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -