Shaakuntalam Movie Review : சமந்தா ரசிகர்களே நீங்கள் மட்டும் இதை பார்க்கலாம்..மற்றவர்கள் யூ டர்ன் அடிச்சுடுங்க!
ஸ்வாமித்திரர் - மேனகை தம்பதிக்கு பிறந்த குழுந்தையே சகுந்தலா. ஆசிரமத்துக்கு எதிர்பாராதவிதமாக வருகை தரும் துஷ்யந்த மகாராஜாவுடன் (தேன் மோகன்) காதலில் விழுந்து, அவரை காந்தர்வ திருமணம் செய்துகொண்டு, குழந்தைக்குத் தாயாகிறார் சகுந்தலா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅனைவருக்கும் முன் திருமணம் செய்து சகுந்தலையை அழைத்து செல்கிறேன் என உறுதியளிக்கும் துஷ்யந்தன், சாபத்தால் பழைய நினைவுகளை மறக்கிறான். அதன் பின் என்ன நடக்கிறது? சகுந்தலையும் துஷ்யந்தனும் மீண்டும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.
புராணக்கதையை முதல் பாதியில் சற்று சுவாரஸ்யமாகவே கடத்தியிருக்கிறார்கள், குறிப்பாக காதல் காட்சிகள், சமந்தா - தேவ் மோகன் இடையேயான கெமிஸ்ட்ரி ஆகியவை படத்துக்கு வலு சேர்க்கின்றன.
60களின் கதாநாயகிகள் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சமந்தா அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார்.சூஃபியாக நம்மைக் கவர்ந்த தேவ் மோகனின் அடுத்த படம் இது. துஷ்யந்த மகாராஜா கதாபாத்திரத்தில் பொருந்திப் போய் இருக்கிறார். ஆனால் இன்னும் சற்று நன்றாக நடித்திருக்கலாம்.
ஜவ்வென இழுக்கும் இரண்டாம் பாதி, சீரியல்களை மிஞ்சும் சோகம், நாம் வெகு நேரம் ஏதோ இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிறோம் என்ற சலிப்பு ஏற்படுகிறது.
நீங்கள், கணவனே கண் கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், சத்தியவான் - சாவித்திரி போன்ற படங்களை பார்த்து ரசித்து வளர்ந்த நபர்கள், தொலைக்காட்சி புராண சீரியல்களின் ரசிகர்கள் என்றால் இந்தப் படத்தை நிச்சயம் ரசிக்க முடியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -