DD Returns Review : டைமிங் டயலாக்குகளால் அப்ளாஸ் அள்ளும் சந்தானம்..டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் குட்டி விமர்சனம் இங்கே!
பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகமான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனத்தை காணலாம்.
முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா.. அங்கே சூதாட்டத்தை தொழிலாக கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் குடும்பத்தினர் ஊர் மக்களால் எரித்து கொல்லப்படுகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையில் படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் பங்களாவில் தஞ்சம் புகுகின்றனர்.
பேராசை மனிதர்கள் பேய்களாக அலையும் அந்த பங்களாவில் கேம் விளையாடி வென்றால் பணம்.. இல்லையெனில் மரணம் என நிலை இருக்கிறது. இதனை சந்தானம் தொடங்கி மொட்டை ராஜேந்திரன் வரை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
image 4
image 5ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம் என்பதால் அதில் அசால்டாக வெற்றி பெற்றுள்ளார்கள்.
பேய் படத்தில் லாஜிக் பார்க்க்கூடாது என்ற விதி உண்டு. அதனை மறந்து விட்டு படம் பார்த்தால் சிரிப்பு சரவெடி தான். ஆங்காங்கே டைமிங் டயலாக்குகளும் அப்ளாஸ் அள்ளுகிறது. சந்தடி சாக்கில் அரசியல்வாதிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பகடி செய்கிறார்கள்.ஆக மொத்தம் பேய் கான்செப்டில் சந்தானம் மீண்டும் ஒரு சூப்பரான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.