Lal Salaam Movie Review : மாஸ் வசனங்களுடன் திரையை தெறிக்க வைக்கும் ரஜினி..லால் சலாம் குட்டி விமர்சனம் இங்கே..!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க, விஷ்னு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது இத்திரைப்படம்.
ஒரு கிராமத்தில் இந்து, முஸ்லீம்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கிரிக்கெட் போட்டியினால் ஒரு பிளவு ஏற்படுகிறது.
அந்த பிளவை பயன்படுத்தி சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். அத்தனை தடைகளையும் மீறி ஊர் ஒன்று சேர்ந்ததா? விக்ராந்த், விஷ்னு விஷால் இருவரும் தங்கள் கிரிக்கெட் உலகில் வெற்றி பெறுகிறார்களா? என்பதே படம்.
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள லால் சலாம் தனது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை பெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
இரண்டாம் சற்று மெதுவாக நகர்ந்தாலும் ஒரு சமூகத்தில் வாழும் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக லால் சலாம் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -