Lover Movie Review : இளசுகளின் காதலை பேசும் லவ்வர்..திரைப்படம் எப்படி இருக்கு..? குட்டி விமர்சனம் இங்கே..!
அறிமுக இயக்குநர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கௌரிப் பிரியா,கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், ஹரிணி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ்வர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகல்லூரி முடித்த உடன் தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மணிகண்டன், தொழில் தொடங்க முடியாத விரக்தியால் கஷ்டப்படுகிறார்.
இந்த கோபத்தை எல்லாம் தான் கல்லூரியில் இருந்தே காதலித்து வரும் ஶ்ரீ கௌரி பிரியாவின் மீது காட்டுகிறார்.
இதனால் அவர்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சினை வருகிறது. இந்த பிரச்சினைகளை சரி செய்தாரா மணிகண்டன்? அவரது தொழில், காதல் இரண்டிலும் வெற்றி பெற்றாரா? என்பதே கதை..
நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்த, மணிகண்டன், கௌரி பிரியா கவனத்தை ஈர்கின்றனர். படம் சிறிது நீளமாக இருந்தாலும் இன்றைய சூழலில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு அதனுள் இருக்கும் சிக்கல்களை சிறப்பாக பேசியிருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள்.
மொத்தத்தில் காதலர் தின வாரத்தில் காதலர்கள் திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு சிறந்த படமாக லவ்வர் இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -