Siren Movie Review : கைதியாக ஜெயம் ரவி..போலீஸாக கீர்த்தி சுரேஷ்..எப்படி இருக்கு சைரன் திரைப்படம்?
அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி,கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் சைரன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்யாத குற்றத்திற்காக ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து ஆயுள் தண்டனைக் கைதியான ஜெயம் ரவி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வெளியாகிறார்.
வெளியே வந்த அவர் தனது சிறை தண்டனைக்கு காரணமானவர்களை பழி வாங்க வேண்டும் என நினைக்கிறார். இவரது முயற்சி வெற்றி பெற்றதா? ஜெயம் ரவி தான் குற்றவாளி இல்லை என்பதை நிருபித்தாரா? என்பதே திரைப்படம்.
நடுத்தர வயது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் ஜெயம் ரவி. ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஒட்டாமல் ஒட்டுகிறார் கீர்த்தி. மொத்தத்தில் நடிகர்களின் நடிப்பு பெரிதாக சொல்லி கொள்ளும்படி இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஜி.வி. பிரகாஷின் பாடல்களும் பின்னனி இசையும் ஒத்துப்போகின்றது.
மொத்தத்தில் இயக்குநர் சில ஓட்டைகளை மட்டும் சரி செய்திருந்தால் முதல் படமே அவருக்கு சிறப்பான படமாக அமைந்திருக்கும் என்பதே உண்மை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -