LGM Movie Review : ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த தோனியின் முதல் தயாரிப்பு..எல்.ஜி.எம் படத்தின் குட்டி விமர்சனம் இதோ!
தோனி தயாரிப்பில் வெளியான “எல்.ஜி.எம்” (Lets Get Married) படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா , யோகி பாபு, ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எல்.ஜி.எம் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரண்டு வருட டேட்டிங்கிற்கு பிறகு ஹரிஷ் கல்யாணும், இவானாவும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என இவானா தெரிவிக்கிறார்.
இதனால் திருமண பேச்சு நின்று போகிறது. ஆனாலும் ஹரிஷ் கல்யாணை விட மனசில்லாமல் நதியாவை பற்றி புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் ஒன்றை இவானா பிளான் செய்ய அதை ஹரிஷ் கல்யாண் செயல்படுத்துகிறார். இந்த ட்ரிப் ஒர்க் அவுட் ஆனதா.. மாமியார் நதியாவுடன் மருமகள் இவனா ஒன்று சேர்ந்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.
நடிப்பில் குறை வைக்காத அளவுக்கு நடித்திருந்தாலும் படத்தில் யாருடைய நடிப்பும் முழுமையாக வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது. முக்கால்வாசி படம் இவானா, நதியாவை சுற்றுவதால் ஹரிஷ் கல்யாண் இரண்டாம் பாதியில் சிறப்பு தோற்றத்தில் வருவது போல நினைக்க வைக்கிறது.
முதல் பாதி ரசிக்க வைத்த நிலையில் இரண்டாம் பாதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். காட்சிகளில் கொஞ்சம் கூட அழுத்தம் இல்லாமல் இருக்கிறது.
காதல்,சென்டிமென்ட் போன்றவை ரசிகர்களுக்கு மனநிறைவை தரவில்லையோ என தோன்றுகிறது. பாடல்களும் ஒன்றவே இல்லை. ஆக மொத்தத்தில் எல்.ஜி.எம் படம் ஏமாற்றம்..!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -