Takkar movie review: நீண்ட....காத்திருப்புக்குப் பின் வெளியான டக்கர் மக்களை கவர்ந்ததா? குட்டி ரிவ்யூ இதோ..
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பணக்காரன் ஆக வேண்டும் என்ற கனவோடு சென்னை வரும் ஹீரோ (சித்தார்த்), தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரால் அந்த வேலையில் நிலைத்து இருக்க முடியாமல் கடைசியாக பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இருக்கிறார்.
சென்னையில் போதைப்பொருள், ஆள் கடத்தல், ரவுடியிஸம் ஆகிய அனைத்தும் கிடைக்கும் ஒரு இடம் காட்டப்படுகிறது. சந்தர்ப்ப சூழலால் இந்த ஏரியாவுக்கு வரும் சித்தார்த் அங்கிருந்த கார் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அந்த காரில் கடத்தப்பட்ட பணக்கார பெண்ணான ஹீரோயின் இருக்கிறார். இவர்களின் வாழ்க்கை எப்படி இணைகிறது? சித்தார்த் தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.
ஹீரோ, ஹீரோயின் , வில்லன் குரூப் என ஒவ்வொருவராக அறிமுகப்பத்தப்படுவதற்குள் படத்தின் முதல்பாதி முடிந்து விடுகிறது. இரண்டாம் பாதியிலாவது கொஞ்சம் விறுவிறுப்பான ஒரு ரோட் மூவி பார்க்கலாம் என்று எதிர்பார்த்தால் மிக நிதானமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக்.
வில்லன்களின் கூட்டத்தில் இருக்கும் யோகி பாபுவின் நகைச்சுவை மற்றுல் நிவாஸ் கே பிரசன்னாவின் சில பாடல்கள் மட்டுமே படத்திற்கு ஒரே ஆறுதலாக அமைந்துள்ளது .
ஆக மொத்தம் பழைய கதையுடன் திரை இறங்கி இருக்கும் டக்கர் கொஞ்சம் மக்கர் தான்..!