Bombay : 28 வருடங்களை கடந்தும் தமிழ் சினிமாவில் மேலோங்கி நிற்கும் மணிரத்தினத்தின் பம்பாய்!
பம்பாய் படம் வெளியாகி, 28 வருடங்கள் கடந்துவிட்டதை நம்ப முடியாத அளவிற்கு இன்றும் பலரின் மனதில் அப்படம் இடம்பெற்றுள்ளது. மணிரத்னத்தின் மத நல்லிணக்க காவியத்திற்கு இசை மூலம் உயிர் கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅரவிந்த் ஸ்வாமி சேகர் எனும் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். பிறப்பால் இந்துவான சேகர், ஷைலா பானு எனும் இஸ்லாமிய பெண் மீது காதல் கொள்வார்.
இந்த ஜோடி, சமூகத்தில் நிலவி வரும் மத வேற்றுமையை தாண்டி திருமணம் செய்து கொள்வர்.
ரோஜாவில் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்தினம் காம்போ, பம்பாய் படத்திலும் இணைந்து வெற்றிக்கனியை அடைந்தது.
மணிரத்தினத்தின் க்ளாசிக் படைப்புகளில், இடம்பெறும் இப்படம் காதலுடன் அரசியலையும் காட்சிப்படுத்தியிருக்கும்.
நாசரின் கோபக் கொந்தளிப்பு, கிட்டியின் அலட்டில்லாத நடிப்பு, பம்பாய் படத்தை சிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் மத பிரிவினை ஓங்கி இருந்த நிலையில் மணிரத்தினத்தின் படைப்பு பெரும் மாற்றத்தை உருவாக்கியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -