Kaadhalum Kadandhu Pogum : ‘போங்கு அய்யா போங்கு..’ 7 ஆண்டுகளை கடந்த காதலும் கடந்து போகும்!
நடிகர் விஜய்சேதுபதியை பல பரிமாணங்களில் பார்த்திருப்போம். விஜய் சேதுபதியை காதலும் கடந்து போகும் படத்தில் காமெடி செய்யும் ஏரியா ரவுடியாக காட்டி இருப்பார் இயக்குநர் நலன்குமாரசாமி .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமடோனா செபாஸ்டியன் இதற்கு முன் மலையாளத்தில் பிரேமம் எனும் படத்தில் நடித்து உள்ளார். தமிழில் அறிமுகமான படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
கிராமத்தில் இருந்து வரும் ஒரு பட்டதாரி பெண் (மடோனா) வேலைக்காக நகர்புறத்திற்கு வருகிறார். பண பற்றாக்குறையின் காரணமாக லோக்கல் ஏரியாவில் தங்கி இருப்பார்.
அந்த பெண் தங்கி இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் காமெடி செய்யும் ரவுடி (விஜய்சேதுபதி) வசித்து இருப்பார்.
மோதலில் ஆரம்பித்த இவர்களின் உறவு, நட்பாக மாறும். பின், காதலில் விழும் அளவிற்கு இவர்கள் இருவரும் நெருக்கமாகி விடுவார்கள்.
இரண்டு வருடம் கழித்து இருவரும் பார்க்கும் போது கதாநாயகி நல்ல நிலையில் இருப்பார். நாயகன் சின்ன வேலையில் இருப்பார். காதல் உணர்வை அழகாக காட்டிய “காதலும் கடந்து போகும்” வெளியாகி ஏழு வருடம் நிறைவாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -