Leo Update : லியோ செட்டில் பிரபல ஹிந்தி இயக்குநர்.. இந்தமுறை என்ன அப்டேட்டாக இருக்கும்?
தளபதி-லோக்கி கூட்டணியில் உருவாகும் லியோ வின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இந்த படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇச்சமயத்தில், பிரபல பாலிவுட் இயக்குநரான கரண் ஜோகர், ரன்வீர்-ஆலியா நடிக்கும் ராக்கி ஆர் ராணி ப்ரேம் கஹானி படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பும் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கரண், லியோ செட்டிற்க்கு சென்றுள்ளார். மேலும் அவர் த்ரிஷா மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை கோலிவுட், பாலிவுட் சினிமா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த புகைப்படத்தை பகிரும் ரசிகர்கள் வெவ்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்
கூடுதலாக, லியோவின் ஹிந்தி விநியோக உரிமையை கரணின் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் பெறும் என்றும் கூறி வருகின்றனர், இவ்வாறு நடந்தால் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடும் முதல் தமிழ் படமாக லியோ அமையும்.
லியோவின் இந்த புதிய அப்டேட்டினால் சினிமா ரசிகர்கள் குஷி ஆகியுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -