Celebrities on Mother's Day: ஃபோட்டோவுடன் அன்னையர் தின வாழ்த்து சொன்ன வரலட்சுமி சரத்குமார்!
சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சண்ட கோழி 2’, ‘சர்கார்’, ‘மாரி 2’, ‘இரவின் நிழல்’ படங்களின் மூலம் கவனம் பெற்றார்.
இவர் தனுஷ் நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் - மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது
இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய அம்மாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இதற்கு பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.
இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவரது சையா சரத்குமாருக்கு அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
என்னுடைய வலிமையான மகளிருக்கு அன்னையர் தின வாழ்த்துகள் என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் - மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவரும் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.