அதர்வாவுடன் முதல் முறையாக கைக்கோர்க்கும் நிமிஷா சஜயன்!
அதர்வாவின் அடுத்த படத்தை ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.
மனம் கொத்தி பறவை, டா டா , கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த அம்பேத்குமார் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார்.படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் பா ரஞ்சித், ஹெச் வினோத் மற்றும் நடிகர் அதர்வா படத்தின் நடிகை நிமிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நேற்றே தொடங்கியது.
சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள சில பகுதிகளில் படத்தின் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.
ட்ராமா ஜானரில் இத்திரைப்படம் உருவாகிறது.இந்த திரைப்படத்திற்கு ''டி என் எ'' என பெயரிட்டுள்ளனர் .தொடர் தோல்விகாரணமாக அதர்வாவின் இப்படம் வெற்றியடைய
இப்படம் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது