IND Vs PAK : இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் காணவிருக்கும் மூன்று ஜாம்பவான்கள்!

13 வது உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது .இதற்கு முன் இந்தியா விளையாடிய 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ள நிலையில் வரும் 14 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதற்காக பிசிசிஐ சார்பாக பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

பிசிசிஐ -யின் இந்த செயல் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“உலகக்கோப்பை தொடக்க விழாவை நடத்தாத பிசிசிஐ ஏன் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை மட்டும் இப்படி பிரம்மாண்டமாக நடத்த வேண்டும்?”என்ற கேள்வியும் தற்போது எழுந்து வருகின்றன.
இந்த விழாவிற்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்,அமிதாப்பச்சன் , ரஜினி உள்ளிட்டோரை பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா நேரில் சென்று கோல்டன் டிக்கெட் கொடுத்து அழைத்தது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் பரவி வைரலாகின.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -