Thani Oruvan 2 Update : 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் களமிறங்க காத்திருக்கும் மித்ரன்...அப்டேட் கொடுத்த படக்குழு!
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் ஸ்வாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அப்போது முதல் ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர். ஆனால் இயக்குநர் மோகன் ராஜாவும் ஜெயம் ரவியும் வெவ்வேறு படங்களில் கமிட்டாகி பிஸியாகி விட்டனர்.
இன்று தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.
மேலும் தனி ஒருவன் முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனமே அதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.
இந்த அப்டேட்டை அனௌன்ஸ்மெண்ட் வீடியோ மூலம் வெளியிட்டுள்ள படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2024 ஆம் தொடங்கும் என்ற தகவலையும் கொடுத்துள்ளது.
இந்த சர்ப்ரைஸ் அப்டேட்டினால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.