Musk Melon: சம்மரை சமாளிக்க உதவும் முலாம் பழம்...நன்மைகள் என்னென்ன...?
முலாம்பழம்.. இது ஒரு பழமையான பழம். ஆங்கிலத்தில் இதனை சன் மெலன் என்று அழைக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் வைட்டமின்கள் ஏ, சி, பி 1 மற்றும் பி 2 மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
இந்த பழம் கொழுப்பைக் குறைக்க நமக்கு உதவுகிறது. இதில் கோடை காலத்திற்கு தேவையான நீர்ச்சத்தும், சுவையும், அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
முலாம்பழத்தில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது. இது முடி உதிர்தலைத் தடுத்து முடி வளர உதவுகிறது.
முலாம்பழத்தில் பீட்டா கரோடீன் இருப்பதால் அது கண்களைப் பாதுகாக்கும். பீட்டா கரோடீனில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளைத் தீர்க்கும்.
மாதவிடாயினால் ஏற்படும் வயிற்று வலி வந்தால், முலாம் பழத்தை சாப்பிடலாம். அது மாதவிடாய் கால வயிற்றுவலிக்கு நல்ல நிவாரணியாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -