Mass Heros Movies Released Date: அடுத்தடுத்து தியேட்டரில் வெளியாக இருக்கும் மாஸ் ஹீரோ படங்கள்
வருகின்ற ஜூன் மாதம் 12 ஆம் தேதி இந்தியன்- 2 படமும், ஜூன் 28 ஆம் தேதி ராயன் படமும் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா -2 படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியும், விக்ரம் நடந்துள்ள தங்கலான் படம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
செப்டம்பர் 5 ஆம் தேதி விஜய் நடித்துள்ள தி கோட் படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகலாம் என சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள வேட்டையன் படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என நெருங்கிய சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மகிழ் திருமேனி- அஜித்குமார் கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படம் வருகின்ற நவம்பர் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
சூர்யா நடித்து வரும் படம் கங்குவா படமும், கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படமும் டிசம்பர் மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.