HBD Manivannan : மனதிலிருந்து மறையாத கலைஞர் மணிவண்ணனின் பிறந்தநாள் இன்று!
தனுஷ்யா | 31 Jul 2024 08:46 AM (IST)
1
கிழக்கே போகும் ரயில் படத்தை பார்த்த மணிவண்ணன், இயக்குநர் பாரதிராஜாவுக்கு 100 பக்கத்திற்கு கடிதம் எழுதினார். இது, இவருக்கான சினிமா வாய்ப்பை அமைத்து கொடுத்தது
2
பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் உள்ளிட்ட படங்களுக்கு மணிவண்ணன் வசனம் எழுதினார்
3
கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களையும் இயக்கினார்
4
சத்தியராஜை வைத்து அரசியல் கதைகளத்தை கொண்ட அமைதிப்படை படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் முன்னோடியாக விளங்கினார்.
5
அதன் பிறகே குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். சில படங்களில் காமெடியனாகவும் வில்லனாகவும் நடித்துள்ளார்.
6
அவரது 50வது படமான நாகராஜன் சோழன் எம் ஏ, எம் எல் ஏ படத்தின் ரிலீஸிற்கு பின்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.