Malavika Mohanan Vs Nayanthara: செம்ம தில்லு; மருத்துவ மனையில் கூட ஃபுல் மேக்கப்! சந்தடி சாக்கில் நயனை விமர்சத்தை மாளவிகா மோகனன்!
ரஜினிகாந்த், சசிகுமார் நடிப்பில் வந்த பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். அதன் பிறகு விஜய் நடித்த மாஸ்டர், தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்திருந்த மாளாவிகா மோகனன், கடைசியாக 'தங்கலான்' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தற்போது 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் முன்னணி நடிகையான நயன்தாராவின் நடிப்பு பற்றி விமர்சனம் செய்திருந்தார்.
அதாவது, நடிகையின் பெயரை குறிப்பிடாத மாளவிகா மோகனன், மருத்துவமனை காட்சியை மறைமுகமாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனாலும் ரசிகர்கள் ஓ இது ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் மருத்துவமனை சீனை குறி வைத்து விமர்சிப்பதாக அறிந்து கொண்டனர்.
மாளவிகா மோகனின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகவே, நயன் தாராவோ இது போன்ற வெளி விமர்சனங்களை விட தன்னோட வேலைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி பதிலடி கொடுத்தார்.
மாளவிகா மோஹனன் கடைசியாக பாலிவுட்டில் யுத்ரா என்ற படத்தில் நடித்தார். தற்போது சர்தார் 2 என்ற தமிழ் படத்திலும் தி ராஜா சாகேப் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.