ராஷ்மிகா எங்கு சென்றாலும் கூடவே செல்லும் விஜய் தேவரகொண்டா! வெளியானது லன்ச் டேட்டிங் போட்டோஸ்!
நீண்ட காலமாக, காதலை வெளிப்படுத்தாமல் டிராவல் பண்ணும் நடிகர் நடிகை யாரென்றால் அது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தான். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் துளிர்விட காரணமாக அமைந்தது தெலுங்கில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதன் பின்னர் டியர் காம்ரேட் படத்தில் மீண்டும் இவர்கள் லவ் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாலும் படம் ஊத்தி கொண்டது. அடுத்தடுத்து இரு படங்களில் இவர்கள் நடித்ததால், இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதே போல் இருவரும் காதல் உறவை ஒப்புக்கொள்ளவும் இல்லை.
சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா கூட தான் சிங்கிள் இல்லை என்றும், ஒரு நடிகையுடன் டேட்டிங் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். எந்த நடிகை என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனால் நடிகையுடன் உறவில் இருப்பதாக கூறியிருந்தார். நெட்டிசன்களோ அவர் உண்மையில் ராஷ்மிகா மந்தனா பற்றி தான் பேசுகிறார் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தான் இப்போது ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக லஞ்ச் சாப்பிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது இருவருக்கும் இடையிலான நெருக்கத்தையும், காதலையும் வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
அதோடு இருவரும் ஒரே கலரில் தான் காஸ்டியூமும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஏன் தற்போது புஷ்பா 2 புரோமோஷனில் பிஸியாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா சென்னையில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் தகவலை உறுதி செய்தார்.
விஜய் தேவரகொண்டா என்ன தான் படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும்... ராஷ்மிகா செல்லும் இடமெல்லாம் இவரும் கூடவே செல்வதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். நேஷ்னல் கிரஷ் ஆச்சே? இப்படிலாம் போய் தான் ஆகும் இது தான்... பல ரசிகர்களின் மயின்ட் வாய்ஸ்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -