Madonna Sebastian: பெருகி கொண்டே போகும் லியோ படக்குழு...இப்போது கூட்டத்தில் இணைந்தது யார் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தின் ஷூட் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிவடைந்தது. பின்னர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னை வந்தடைந்தது.
இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் லியோ படத்திற்காக 1500 நடனக் கலைஞர்கள் கொண்டு விஜய் நடனமாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வந்தது.
இப்போது லியோவில் நடிகை மடோனா இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நட்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.