Yash : ராமாயண படத்தில் ராவணனாக நடிக்கிறாரா ராக்கி பாய் யஷ்?
ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்க பட்டு வெளியாக உள்ள படம் ஆதிபுருஷ். 750 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிலையில் ராமாயணத்தை மையமாக வைத்து மற்றொரு படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் எடுக்கப்படவுள்ளதாம்.
இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது
இதில் ராமனாக ரன்பீர் கபூர் நடிக்க அவரின் மனைவி ஆலியா பட் சீதையாக நடிக்க உள்ளார் என தகவல் வந்துள்ளது.
ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் யஷ்ஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். கடந்த 8 மாதமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் யஷ் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -