A.R Rahman : தி கேரளா ஸ்டோரி இயக்குநருடன் கைக்கோர்க்கும் ஏ.ஆர் ரஹ்மான் - நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு!

சமீபத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பி நாடு முழுவதும் பேசுபொருளான படம் 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே கடந்த மே 5ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
அடா ஷர்மா, சித்தி இட்னானி, தேவ தர்ஷினி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், சுதிப்தோ சென் இப்படத்தை இயக்கியிருந்தார்

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான காட்சிகளே இப்படத்தில் இடம்பெற்றன.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், சமூக வலைதளவாசிகள் என பலரும் இந்தப் படத்திற்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்
தற்போது சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி படம் எடுக்க போவதாக சுதிப்தோ சென் தற்போது அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளார். சஹாரா ஸ்ரீ என பெயர் சூட்டப்பட்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
அதிருப்தி அடைந்த நெட்டிசன்ஸ்‘மதவெறுப்பு மற்றும் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இயக்குநர் சுதிப்தோ சென்னுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார். பணம்தான் ரஹ்மானுக்கு முக்கியம் போல..’என அவர்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -