Raasa kannu : வலி நிறைந்த வரிகளும் மனதை கனக்க செய்யும் குரலும்..வெளியானது மாமன்னனின் ராசா கண்ணு பாடல்!
சுபா துரை | 19 May 2023 06:37 PM (IST)
1
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் மாமன்னன்.
2
இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் இன்று இப்படத்தின் முதல் பாடலான ராசா கண்ணு வெளியாகியுள்ளது.
3
யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை வடிவேலு பாடியுள்ளார்.
4
இதுவரை நகைச்சுவையாகவே வடிவேலுவின் குரலை கேட்டு பழகிய காதுகளுக்கு இந்த பாடல் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
5
தாக்கத்தை ஏற்படுத்தும் வரிகளைக் கொண்டுள்ள இப்பாடல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது.
6
மொத்தமாக, இசைப்புயலும் வைகைப்புயலும் இணைந்து கொடுத்த அற்புத படைப்பு “ராசா கண்ணு”.