HBD Lakshmi Menon : அள்ளி முதல் பாரதி வரை..தமிழ் சினிமாவை கலக்கி வந்த இளம் நடிகையின் கதை!
பள்ளிக்கூடம் போகும் வயதில் கூத்து பட்டறைக்கு கூட போகமால் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். மாலிவுட்டில் தன் திரை பயணத்தை தொடங்கிய இவர், பிரபு சாலமனின் கும்கியில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய லட்சுமியை பார்த்த இயக்குநர் பிரபாகரன், சசிகுமாருக்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
கிராமத்து கதாபாத்திரங்களுக்கென செதுக்கி வைத்தவராக வலம் வந்த லட்சுமி மேனன், நான் சிகப்பு மனிதன் படத்தில் சிட்டி பெண்ணாக நடித்து பாராட்டுகளை பெற்றார்.
மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்கா என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனனின் கால்ஷீட் நிரம்பி வழிந்த காலம் அது.
மீண்டும் தன் முதல் ஆன் ஸ்கீரின் ஜோடியான விக்ரம் பிரபுவுடன் இணைந்து புலிக்குத்தி பாண்டியில் நடித்தார். முன்னதாக இவருக்கு வொர்க்-கவுட்டான கிராமத்து பின்னணி கதை, இம்முறை சொதப்பியது.
வருடத்திற்கு 4-5 படங்களில் நடித்து வந்த லட்சுமியின் காட்டில் கொட்டி வந்த மழை நிற்க, பரதத்தில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -