HBD Sid Sriram : ‘அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற...’ சித் ஸ்ரீராமுக்கு இன்று பிறந்தநாள்!
சிறுவயதிலிருந்து இசை மீது ஆர்வம் கொண்டு இருந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இசைக்கல்லூரியில் இணைந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அடியேயயயயய என்று ஜவ்வாய் இழுத்து பாட தொடங்கிய இவர், இப்போதைய முன்னணி இசையமைப்பாளர்களின் கைவண்ணத்தில் குரல் ஜாலம் செய்து வருகிறார்.
இதுவரை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.
பாலிவுட் உலகிற்கு ஒரு அர்ஜித் சிங் இருப்பது போல, தென்னிய சினிமா உலகிற்கு சித் ஸ்ரீராம் ஒருவர் இருக்கிறார் என பல இசை ரசிகர்கள் இவரை பெருமைப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் வளர்ந்து, ஆங்கிலத்தில் சரளமாக பேசும் இவரின் தமிழ் உச்சரிப்பு தங்கு தடையின்றி அமிர்தமாய் வழிந்தோடும். தற்போது மைலாப்பூரில் வசித்து வரும் இவர், கர்நாடக இசைக்கலைஞர்கள் நடத்தும் மார்கழி உட்சவிலும் பாடி வருகின்றார்.
பாடகராக இருந்த இவர் 2020-ல் வெளியான வானம் கொட்டட்டும் படம் மூலம் இசையமைப்பாளராக அப்டேட் ஆனார். அப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணு தங்கம் ராசாத்தி..’ பாடலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இன்று பிறந்தநாள் காணும் 2கே கிட்ஸ்களின் இசை மன்னனான சித் ஸ்ரீராமுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.