Lokesh Kanagaraj : ‘என் ஆண்டவருடன் இணைந்ததற்கு வாழ்த்துகள்..’ வைரலாகும் லோக்கியின் லேட்டஸ்ட் பதிவு!
மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதனை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார்.
லியோ படத்தின் ரிலீஸிற்கு பின்னர், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழாவை நடத்த, காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி தந்துள்ளது
தற்போது, விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் பணியாற்றிய லோக்கி, கே.ஹெச் 233 படத்தில் கமலுடன் இணையும் ஹெச்.வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் கே.ஹெச் 234 படத்தில் கமல் - மணிரத்தினத்துடன் பணிபுரியும் அன்பு, அறிவு ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த கே.ஹெச் 234 படக்குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -