Rolex : எல்.சி.யுவில் புதிய ட்விஸ்ட்..ஹரோல்ட் தாஸின் மகன் தானா ரோலக்ஸ்..?
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. லியோ படத்தின் இரண்டாம் பாதி படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. குறிப்பாக அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் இருவரின் கதாபாத்திரங்களும் முழுமையாக இல்லை என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்தோனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் ஆகிய இருவருக்குமான ஃபிளாஷ்பேக் திருப்திகரமாக இல்லாததே இரண்டாம் பாதியில் படம் தொய்வடைவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக சொல்லப் படுகிறது. மறுபக்க வசூல் ரீதியாக லியோ திரைப்படம் மிகப்பெரிய இலக்கை எட்டும் என்பதை முதல் நாள் வசூலே சொல்கிறது. வெளியான முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவது 148 கோடி வசூல் செய்துள்ளது லியோ.
இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம் என்றால் லியோ லோகேஷ் கனகராஜின் எல்.சி. யு வில் இணந்துள்ளது. இதுவரை கார்த்தி, கமல்ஹாசன், சூர்யா எல்.சி.யு வில் இணைந்திருந்த நிலையில் தற்போது விஜய்யும் இணைந்துள்ளார்.
image 1
எல்.சி.யு வில் இருக்கும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். லியோ படத்தில் சஞ்சய் தத் நடித்த அந்தோனி தாஸின் மகனாக வருகிறார் லியோ தாஸ். அதே நேரத்தில் அந்தோனி தாஸின் சகோதரன் ஹரோல்டு தாஸாக வருகிறார் நடிகர் அர்ஜுன். இதில் ஹரோல்டு தாஸின் கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஹரோல்டு தாஸின் குணாதிசயங்கள் அனைத்தும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தோடு ஒத்துப்போகும் வகையில் லோகேஷ் கனகராஜ் இந்த கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார். கைகளை வெட்டுவது, சிகரெட் பிடிப்பது என இரு கதாபாத்திரங்களுக்கு இடையில் பல்வேறு ஒற்றுமைகளை கண்டுபிடித்த ரசிகர்கள் ரோலக்ஸ் ஹரோல்டு தாஸின் மகனாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
லியோவும் ரோலக்ஸும் சகோதரர்களாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. தனது தந்தையை லியோ தாஸ் கொன்றதை தொடர்ந்து லியோவுடன் ரோலக்ஸுக்கு பகை ஏற்படலாம். இந்த கணிப்புகள் எல்லாம் மிகக் கச்சிதமாக பொருந்திப் போவதால் சூரியா மற்றும் விஜயை மீண்டும் ஒரு முறை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -